அட்லீ தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைய அடுத்தது விஜய் இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அதன்படி தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கி வெற்றுக் கண்டார். அதன் பின்னர் பாலிவுட் பக்கம் திரும்பி பாலிவுட் ஸ்டார் நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளைப் பெற்றார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு முதல் படத்திலேயே ஆயிரம் கோடியை தட்டி தூக்கிய இயக்குனர் என்ற பெருமையையும் பெற்றார் அட்லீ. அடுத்ததாக அட்லீ, அல்லு அர்ஜுனை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் பரவி வந்த நிலையில் சமீபத்தில் அப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கைவிடப்பட்ட அந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் சல்மான் கான் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.