spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழில் கல்லா கட்டமுடியல... கதவை மூடும் ஆஹா தமிழ் ஓடிடி!

தமிழில் கல்லா கட்டமுடியல… கதவை மூடும் ஆஹா தமிழ் ஓடிடி!

-

- Advertisement -

தமிழில் போதிய வரவேற்பு இல்லாததால் ஆஹா தமிழ் ஓடிடி தளம் விரைவில் மூடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் முன்னணி ஓடிடி நிறுவனமாக வலம் வருகிறது ஆஹா. பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் தான் இந்த நிறுவனத்தை வைத்திருக்கிறார்.

we-r-hiring

தெலுங்கு சினிமா மற்றும் வெப் சீரிஸ்களுக்காக பிரத்யேகமாக இந்த தளம் இயங்கி வருகிறது. தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்ற இந்தத் தளம் தமிழிலும் கால் எடுத்து வைத்தனர்.

மற்ற ஓடிடி தளங்களை போல அல்லாமல் ஆஹாவில் கட்டணம் குறைவுதான். என்றாலும் படங்கள் கம்மியாகவே இருக்கின்றன. தளத்திற்கென்று பிரத்தியேகமாக படங்கள் அவ்வளவாக இல்லை. மேலும் தோல்வி அடைந்த படங்களையே அதிகம் வாங்கி வெளியிட்டு வந்தனர்.

தமிழில் வெகு சில படங்கள் மட்டுமே பார்க்குமாறு இருக்கின்றன. எனவே பார்வையாளர்கள் மத்தியில் இந்தத் தளத்திற்கு வரவேற்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே விரைவில் ஆஹா ஓடிடி தங்கள் சேவையை தமிழில் முடித்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. போதிய ஆள் பற்றாக்குறை மற்றும் மிகவும் குறைவான பிரமோஷன் இவையே இந்த நிறுவனத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

MUST READ