Homeசெய்திகள்சினிமாஇந்தப் படத்துல நான் நடிச்சது பெரிய விஷயம்... தீராக் காதல் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்!

இந்தப் படத்துல நான் நடிச்சது பெரிய விஷயம்… தீராக் காதல் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்!

-

- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார். இவர் தற்போது ரோஹின் வெங்கடேஷ் இயக்கத்தில் ,தீராக் காதல்‘ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஜெய், ஷிவதா , அம்ஜத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர். இப்படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் மே 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதேபோல் இயக்குனர் ரோஹினுக்கும் எனக்கும் இரண்டு வருட கதை இருக்கிறது. இப்படத்தின் தலைப்பு வைக்கப்படாத சமயத்தில், லைக்கா நிறுவனத்தின் தமிழ்குமரனுக்கு இந்த படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. அவர் எங்களை தொடர்பு கொண்டு ரோகினை புகழ்ந்து பாராட்டினார். இருந்த போதிலும் இந்தப் படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு நானும் ரோகினும் இந்த படம் ஓகே ஆகிவிட வேண்டும் என்று திருப்பதி மலைக்கு நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தினோம். அப்போதே தமிழ் குமரன் இந்த படம் பண்ணலாம் என்று எங்களை அழைத்து கூறினார். படம் முடிந்த பிறகும் ரோஹின் திருப்பதிக்கு நடந்து சென்றார். மேலும் காதல் படங்களில் நான் பெரும்பாலும் நடித்ததில்லை இந்த படத்தில் நடித்தது மிகப் பெரிய விஷயம்” என்று பேசியுள்ளார்.

இப்படம் முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது என்று பட குழுவினர் கூறியுள்ளனர்.

MUST READ