Homeசெய்திகள்சினிமா'லால் சலாம்' ஓடிடிக்கு வரும்போது இதெல்லாம் இருக்கும்.... ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

‘லால் சலாம்’ ஓடிடிக்கு வரும்போது இதெல்லாம் இருக்கும்…. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

-

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். 'லால் சலாம்' ஓடிடிக்கு வரும்போது இதெல்லாம் இருக்கும்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!அதைத்தொடர்ந்து இவர் வை ராஜா வை எனும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். அதன் பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோரின் நடிப்பில் லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் 6 மாதங்கள் கடந்த நிலையிலும் ஓடிடியிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 'லால் சலாம்' ஓடிடிக்கு வரும்போது இதெல்லாம் இருக்கும்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!அதாவது, “லால் சலாம் திரைப்படத்தின் டைரக்டர் கட் விரைவில் ஓடிடியில் வெளியாகும். இது தியேட்டர் பதிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். தொலைந்து போன காட்சிகளில் சிலவற்றை எங்களால் திரும்ப எடுக்க முடிந்தது. அது இந்த டைரக்டர் கட்- ல் சேர்க்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் அந்த காட்சிகளுக்கு இசையமைத்துக் கொடுத்தார். அதற்காக அவர் எந்த ஊதியமும் பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

MUST READ