குட் பேட் அக்லி படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் மாறி மாறி நடித்து வருகிறார். ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் விரைவில் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி நடிகர் அஜித் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ், சுனில், நயன்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் அஜித்துடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதற்கிடையில் பட குழுவினர் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் இன்றுடன் (ஆகஸ்ட் 3) திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். எனவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக குட் பேட் அக்லி படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.