விடாமுயற்சி திரைப்படம் ஜனவரியில் வெளியாவதை நடிகர் அஜித் உறுதி செய்துள்ளார்.
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக இப்படம் வருகின்ற ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் துபாயில் நடைபெறும் 24H கார் ரேஸிங் பந்தயத்தில் பங்கேற்க சென்றுள்ள அஜித், தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் அடுத்து வரும் ஒன்பது மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிக்க மாட்டேன் எனவும் பந்தயத்தில் தான் சாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
#Ajithkumar: “I have Two Releases Coming up.. One would Releasing in Jan.. Other one is releasing in April or May.. Which gives me time to focus on my Racing Profession.. You see these guys… I love them Unconditionally..”🤩💥
— Laxmi Kanth (@iammoviebuff007) January 11, 2025
அதைத் தொடர்ந்து மற்றுமொரு பேட்டியில், “என்னுடைய இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. அதில் ஒன்று ஜனவரியில் வெளியாகும். மற்றொன்று ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும். இது நான் பந்தயத்தில் கவனம் செலுத்த நேரம் தருகிறது. நான் ரசிகர்களை நிபந்தனை இன்றி நேசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.