spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசக நடிகருக்கு அஜித் கொடுத்த அழகான பரிசு... அசந்துபோன நடிகர்...

சக நடிகருக்கு அஜித் கொடுத்த அழகான பரிசு… அசந்துபோன நடிகர்…

-

- Advertisement -
விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் நடிகர் அஜித்குமார், சக நடிகர் ஆரவுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசை வழங்கி இருக்கிறார்.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நடப்பு ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், ரெஜினா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

we-r-hiring
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜ்ரபைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின்போது, ஆரவ் அஜித்குமாரை எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானிலேயே நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. அதில் ஆரவ் மற்றும் அஜித்குமார் இருவரும் காரில் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

அஜித்குமார் படப்பிடிப்பின்போது சக நடிகர்களுடன் அன்புடன் இருந்துவருகிறார். அவர்களுக்கு பிரியாணி சமைப்பது மற்றும் அவர்களோடு இணைந்து சுற்றுலா செல்வது என மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஆரவுக்கு சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேசிங் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆரவ் மற்றும் அஜித்குமார் இருவரும் பங்கேற்று உள்ளனர்.

MUST READ