நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையிலும் வெளியாகும் என தகவல்கள் கசிந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், ஷூட்டிங் இல்லாத சமயங்களில் பைக் மற்றும் காரை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் சுற்றுலா செல்வது வழக்கம். அதே சமயம் அஜித் கார் ரேஸிங்கில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் உடையவர். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜித், கார் ரேஸிங் அணி ஒன்றை தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த அணியின் லோகோவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
மேலும் 2025 ஜனவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் துபாயில் நடைபெற இருக்கும் 24H கார் ரேஸிங்கில், போர்ஷே 992 ஜிடி 3 கப் என்ற பிரிவின் கீழ் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொள்ளும் எனவும் அந்த அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக நடிகர் அஜித் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தது. இந்நிலையில் அஜித் குமார் ரேஸிங் அணி அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளது.
- Advertisement -