Homeசெய்திகள்சினிமாசிறப்பு மருத்துவ முகாமுக்கு நடிகர் அஜித் வலியுறுத்தல்

சிறப்பு மருத்துவ முகாமுக்கு நடிகர் அஜித் வலியுறுத்தல்

-

ஆர்யா நடித்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கலாப காதலன். இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு கலை இயக்குநராக அறிமுகமானவர் மிலன். பின்னர் ஓரம்போ படத்தில் பணியாற்றிய அவருக்கு அடுத்ததாக அஜித் படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படத்திலும் மிலன் இணைந்து பணியாற்றினார். கலை இயக்குநராக சினிமாவில் பிரபலமும் அடைந்தார்.
மகிழ்திருமேனி இயத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்புக்காக அஜித் மட்டுமன்றி த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரும் அஜர்பைஜான் பறந்தனர். கலை இயக்குநர் மிலனும் அவர்களுடன் அஜர்பைஜான் சென்றிருந்தார். படப்பிடிப்புக்காக ஓட்டல் அறையில் தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென கலை இயக்குநர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக படக்குழுவினர் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை தரப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலன் இல்லாமல், மிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், விடாமுயற்சி படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து, விடாமுயற்சி படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்ய, தயாரிப்பாளருக்கு அஜித் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

MUST READ