Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் 'விடாமுயற்சி' பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு..... புகைப்படங்கள் வைரல்!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு….. புகைப்படங்கள் வைரல்!

-

- Advertisement -

நடிகர் அஜித், துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் நடிகர் அஜித்தின் 62 ஆவது படமாகும். அஜித்தின் 'விடாமுயற்சி' பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு..... புகைப்படங்கள் வைரல்!இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து வருகிறார்கள். அஜித்தின் 'விடாமுயற்சி' பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு..... புகைப்படங்கள் வைரல்!மேலும் இவர்களுடன் இணைந்து ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி ஐதராபாத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் பாடல் ஒன்று மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. அது தவிர மற்ற அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 'விடாமுயற்சி' பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு..... புகைப்படங்கள் வைரல்!படப்பிடிப்பு தளத்தில் அர்ஜுன், திரிஷா, அஜித் ஆகியோர் மற்ற படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் விடாமுயற்சி திரைப்படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ