குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 ஆவது படமாக உருவாக்கி வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஓரிரு நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இருக்கிறது. அதேசமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்து வருகிறார். ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் தவிர திரிஷா, சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே இப்படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ரிலீஸ் 2025 ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போகும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளன. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.