Homeசெய்திகள்சினிமா'அமரன்' அறிமுக விழா வீடியோவை வெளியிட்ட படக்குழு!

‘அமரன்’ அறிமுக விழா வீடியோவை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. 'அமரன்' அறிமுக விழா வீடியோவை வெளியிட்ட படக்குழு!ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஹே மின்னலே எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் எனவும் அதே தேதியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலைவாணர் அரங்கில் அமரன் திரைப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளது. அதாவது முதல் எபிசோடு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 10 மணி அளவில் இதன் இரண்டாவது எபிசோடு ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ