Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகும் 'அமரன்' ரிலீஸ் தேதி..... அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

இன்று வெளியாகும் ‘அமரன்’ ரிலீஸ் தேதி….. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இன்று வெளியாகும் 'அமரன்' ரிலீஸ் தேதி..... அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். இந்த படம் சிவகார்த்திகேயனின் 21 வது படமாகும். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தனது முந்தைய படங்களில் நடித்தது போல் அல்லாமல் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இன்று வெளியாகும் 'அமரன்' ரிலீஸ் தேதி..... அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்! அதன்படி மறைந்த ராணுவ வீரர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக அதாவது முகுந்து வரதராஜனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக ராகுல் போஸ் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று (ஜூலை 17) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமரன் திரைப்படம் செப்டம்பர் 27 இல் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போதைய தகவலின்படி இந்த படம் அக்டோபர் 10ல் கங்குவா படத்திற்கு போட்டியாக களமிறங்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ