Homeசெய்திகள்சினிமாசூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனா?.... வைரலாகும் புகைப்படம்!

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனா?…. வைரலாகும் புகைப்படம்!

-

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனா?.... வைரலாகும் புகைப்படம்!சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான போதும் ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. ஐந்து தேசிய விருதுகளையும் தட்டி தூக்கியது இந்த படம். இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும்  இந்த படத்திற்கு ஸ்டார்ட் அப் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூர்யா இப்படத்தில் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் என்று ஏற்கனவே வெளியான தகவல்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சூர்யா மற்றும் அக்ஷய் குமார், அமிதாப் பச்சன் ஆகிய மூவரும் இணைந்து இருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனும் நடிக்கிறாரா என்றும் தமிழில் வெளியான சூரரை போற்று படத்தில் மோகன் பாபு கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளாரா என்றும் பலரும் தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனா?.... வைரலாகும் புகைப்படம்!

ஏற்கனவே மோகன் பாபுவின் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் அமிதாபச்சன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ