spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார் எமி ஜாக்சன்!

தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார் எமி ஜாக்சன்!

-

- Advertisement -

பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது நீண்ட நாள் காதலரான எட் வெஸ்ட்விக்கை இன்று திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் மதராசப்பட்டினம் திரைப்படம்  அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், பின்னர் தாண்டவம்,  தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

we-r-hiring

எமி

இதனை தொடர்ந்து,  2022 ஆம் ஆண்டு எமி ஜாக்சன்,பிரபல பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலிக்க தொடங்கினார்.  எமி ஜாக்சன் மற்றும் அவரது காதலன் எட் வெஸ்ட்விக் ஆகியோருக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில்,  நீண்ட நாட்கள் காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடி இன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

எமி ஜாக்சன் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இதனை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ