அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து பின்னர் பாலிவுட்டிலும் கால் பதித்து ஒரே படத்திலேயே ரூ.100 கோடியை தட்டித் தூக்கியவர் இயக்குனர் அட்லீ. இவர் ‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட ரூ.600 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் இதன் அறிவிப்பு ப்ரோமோ இணையத்தில் செம வைரலானது. மேலும் படத்தின் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிப்பதாகவும், இதில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளதாவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி தீபிகா படுகோன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்/ நடிகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படத்திற்கு ICON என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இப்படமானது 2027 பொங்கலுக்கு திரைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
