அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியன் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதே சமயம் நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் படமானது 2025 ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராக வருகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், அன்பு – அறிவு மாஸ்டர்கள் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன்படி தற்காலிகமாக KH237 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 மார்ச் மாதம் தொடங்கும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.