Homeசெய்திகள்சினிமாஆண்ட்ரியா நடிக்கும் 'பிசாசு 2' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு 2’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆண்ட்ரியா நடிக்கும் 'பிசாசு 2' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் ஒரு பாடகியாகவும் நடிகையாகவும் வலம் பெறுகிறார். அந்த வகையில் இவர் தொடர்ந்து பல படங்களை பிஸியாக நடித்த வருகிறார். ஏற்கனவே மாஸ்க்கு, மனுஷி, கா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் அண்ட்ரியா. இதற்கிடையில் இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2014 இல் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது படக்குழுவினர் பிசாசு 2 திரைப்படம் 2025 மார்ச் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஆண்ட்ரியா நடிக்கும் 'பிசாசு 2' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!இந்த படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ