spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சர்தார் 2' படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை .... போஸ்டருடன் அறிவித்த படக்குழு!

‘சர்தார் 2’ படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை …. போஸ்டருடன் அறிவித்த படக்குழு!

-

- Advertisement -

சர்தார் 2  மற்றுமொரு பிரபல நடிகை திரைப்படத்தில் இணைந்துள்ளதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.'சர்தார் 2' படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை .... போஸ்டருடன் அறிவித்த படக்குழு!

கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் சர்தார் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்த நிலையில் கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இப்படமானது ஸ்பை திரில்லர் கதை களத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது பல வருடங்கள் கழித்து பிஎஸ் மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்தில் எஸ் ஜே சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் ப்ரோமோ காட்சிகள் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 'சர்தார் 2' படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை .... போஸ்டருடன் அறிவித்த படக்குழு!இதற்கிடையில் சர்தார் 2 திரைப்படத்தில் பிரபல நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

we-r-hiring

நடிகை ஆஷிகா ரங்கநாத் கடந்த 2022-ல் அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ