ஏஆர் ரஹ்மான் புதிய தெலுங்கு படத்திற்கு இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். இவர் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். ஆஸ்கர் வென்ற பிறகு ஏஆர் ரகுமான் உலக அளவில் கவனம் பெற்ற இசையமைப்பாளராக மாறினார்.
அவர் தெலுங்கில் சூப்பர் போலீஸ், நானி, ஏ மாயா சேசாவே, கொமரம் புலி, மற்றும் சாகசம் ஸ்வாசாக சாகிபோ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் அவர் களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘உப்பேனா’ படத்தின் இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் ஏஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஆர் ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், பத்து தல உள்ளிட்ட ஆல்பங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அடுத்து பொன்னியின் செல்வன் 2 வர இருக்கிறது.