Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர்... தெலுங்கு திரையுலகில் களமிறங்கும் வெற்றிமாறன்!

அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர்… தெலுங்கு திரையுலகில் களமிறங்கும் வெற்றிமாறன்!

-

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது இந்திய அளவில் அதிகம் கவனம் பெற்ற இயக்குனராக மாறியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை மற்றும் ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர்.

பெரிய ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக வெற்றிமாறனுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘விடுதலை’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தெலுங்கில் பத்திரியாளர்களைச் சந்தித்த வெற்றிமாறன் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு மற்றும் என்டிஆர் உட்பட பிரபல தெலுங்கு நடிகர்களுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆடுகளத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனை சந்தித்தேன். சென்னையிலும் சந்தித்தோம். அவர் தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். வடசென்னையில் ஒரு கேரக்டர் பற்றி சொன்னேன். இருந்தாலும், அதை இப்போது மாற்றி எழுதி அவரிடம் நடிக்கக் கேட்டேன். ஆடுகளம் படத்திற்குப் பிறகு மகேஷ் பாபுவைச் சந்தித்தேன். அசுரனுக்குப் பிறகு, லாக்டவுனுக்குப் பிந்தைய கட்டத்தில், நான் என்டிஆரைச் சந்தித்தேன், நாங்கள் ஒரு திட்டத்தைப் பற்றி பேசி வருகிறோம். அது கண்டிப்பாக நடக்கும் ஆனால் படத்தை ஆரம்பிக்க அதிக காலம் ஆகும்”  என்று தெரிவித்துள்ளார்.

MUST READ