Homeசெய்திகள்சினிமாசர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ ஆர் ரஹ்மானின் மகள்!

சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ ஆர் ரஹ்மானின் மகள்!

-

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரஹ்மான். கடந்த 1992 இல் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஏ ஆர் ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம் போன்ற பல பழமொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பத்மபூஷன், ஆஸ்கர் போன்ற விருதுகளை வென்றவர் ஏ ஆர் ரஹ்மான்.சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ ஆர் ரஹ்மானின் மகள்!

இத்தகைய பெருமைக்குரிய ஏ ஆர் ரஹ்மானுக்கு கதீஜா, ரஹிமா என இரு மகள்களும் மற்றும் அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இவரின் மகன் அமீன் பல பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் சில மாதங்களுக்கு முன்பாக ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் சில்லு கருப்பட்டி படத்தின் இயக்குனரான ஹலிதா சமீம் இயக்கும் மின்மினி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்நிலையில் கதீஜா ரஹ்மான், சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அதன்படி பிரிட்டிஷ்- இந்திய படமான லயனஸ் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ ஆர் ரஹ்மானின் மகள்!இந்தப் படத்தை கஜ்ரி பாப்பர் எழுதி, இயக்க என் எஃப் டி சி மற்றும் தி பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

கடந்த 2020இல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த பிரஷ்டன் என்ற பாடல் மூலம் அறியப்பட்டவர் தான் கதீஜா என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ