spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர்!

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர்!

-

- Advertisement -

அரண்மனை 4 படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

அரண்மனை 4 படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர்!

we-r-hiring

சுந்தர் சி அரண்மனை 1, 2, 3 போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் வெளியான இந்த மூன்று பாகங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சுந்தர் சி தற்போது அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியுள்ளார். அரண்மனை 4 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 2024 ஏப்ரலில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் நடிகை தமன்னா சுந்தர் சிக்கு தங்கையாக நடித்துள்ளார். மேலும் தமன்னாக்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இவர்கள் கொல்லப்பட்டதற்கான பின்னணி என்ன என்பதை சுந்தர் சி கண்டறிவதை படத்தின் கதையாக தெரிகிறது. சிம்ரன் மற்றும் குஷ்பூ ஆகிய இருவரும் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவருமே படத்தின் இறுதியில் வரும் பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.
இந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ