Homeசெய்திகள்சினிமாஅநீதியை வென்றாரா அர்ஜுன் தாஸ்...... திரை விமர்சனம்!

அநீதியை வென்றாரா அர்ஜுன் தாஸ்…… திரை விமர்சனம்!

-

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கியுள்ள திரைப்படம் அநீதி. இந்த படத்தில் துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசந்தபாலன் அர்பன் பாய்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் சிறுவயதிலிருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த சமயம் வேலைக்கார பெண்ணாக நடித்துள்ள துஷாரா விஜயனுக்கும் அர்ஜுன் தாசுக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. அர்ஜுன் தாஸ் டெலிவரி பாயாக பணிபுரிகிறார். நேர்மையாக வேலை பார்க்கும் சமயங்களில் பலர் இவரை அவமானப்படுத்தி விடுகிறார்கள். அந்த சமயத்தில் இவருக்கு கட்டுப்படுத்த முடியாத கோபமும் கொலை வெறியும் ஏற்படுகிறது. ஒரு சில சமயங்களில் அதை கட்டுப்படுத்தி கொள்கிறார். இவ்வாறாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயனின் அன்பினால் மகிழ்ச்சியடைகிறார். இருவரும் ஒரு சமூகமான வாழ்க்கை வாழ்ந்து வரும் போது இருவரும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்தப் பிரச்சனையில் இருந்து இவர்கள் தப்பித்துக் கொள்கிறார்களா? இல்லையா? அந்த பிரச்சனையின் பின்னணி என்ன? என்பதை அநீதி திரைப்படத்தின் கதையாகும்.

இப்படம் முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தினரை எப்படி நடத்துகிறது என்பதை ஒரு சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறியுள்ளது. இதுவரை வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாசுக்கு ஹீரோ கேரக்டர் பொருந்தி உள்ளதா என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. அர்ஜுன் தாசின் வசனங்கள் அவரின் குரலுக்கு ஏற்றவாறு பொருத்தமானதாக அமைந்துள்ளது. துசாரா விஜயன் தனது முதலாளியிடம் அடிமையாக வாழ்வது, அவமானப்படுவது உள்ளிட்ட பல காட்சிகளில் தனது உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

காளி வெங்கட் அர்ஜுன் தாசன் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வனிதா விஜயகுமார் தனஞ்செயன் உள்ளிட்டோர் தனக்கான கதாபாத்திரத்தில் சரியாக நடித்துள்ளனர். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு கை கொடுத்துள்ளது. இவ்வாறாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் கார்ப்பரேட் சமூகம் ஏழை எளிய மக்களுக்கு இழைக்கும் அநீதி குறித்து பேசியுள்ள இப்படத்தில், திரைக்கதை மற்றும் காட்சிகளின் வழியே ஏழை மக்களின் நீதியை கேட்கும் அழுத்தத்தை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும் எனலாம்.

MUST READ