Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாக இருக்கும் திரைப்படங்களின் அப்டேட்!

நாளை வெளியாக இருக்கும் திரைப்படங்களின் அப்டேட்!

-

- Advertisement -

நாளை (ஜூலை 21) வெளியாக இருக்கும் திரைப்படங்கள்.

கொலை

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றிக்கு பிறகு கொலை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரித்திகா சிங், அர்ஜுன் சிதம்பரம், மீனாட்சி சவுத்ரி, முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ், டேபிள் பிராஃபிட், லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சமீபத்தில் படத்தின் கடைசி ட்ரைலரையும் பட குழுவினர் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அநீதி

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அநீதி. கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் அநீதி திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தை வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் காளி வெங்கட், பரணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வசந்த பாலனின் அர்பன் பாய்ஸ் மற்றும் இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. ட்ரெய்லரில் அர்ஜுன் தாஸ் ஒரு சைக்கோ கொலையாளி போன்று காட்டப்படுகிறார். அதனால் இந்த படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சத்திய சோதனை

நடிகர் பிரேம்ஜி சத்திய சோதனை எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து ஸ்வயம் சித்தா, ரேஷ்மா பசுபுலெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா இந்த படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் டாக்கீஸ் நிறுவனத்தின் கீழ் சமீர் பரத் ராம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ரகுராம் இசையமைத்துள்ளார். ஆர் பி சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலகலப்பான காமெடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. கொரோனா காலகட்டத்திலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிங்க்

பிரபல யூட்யூபர் கிஷன் தாஸ், முதல் நீ முடிவும் நீ என்ற படத்திற்கு பிறகு கதாநாயகனாக தருணம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் சிங்க் என்ற ஹாரர் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து மோனிகா சின்ன கொட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ், நந்தினி வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிவராம் விகே ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விகாஷ் ஆனந்த் ஸ்ரீதரன் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படம் நாளை நேரடியாக ஆஹா தமிழ் என்ற ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது.

MUST READ