Homeசெய்திகள்சினிமாகிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர்...... ரிலீஸ் தேதி அப்டேட்!

கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர்…… ரிலீஸ் தேதி அப்டேட்!

-

கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

யூடுபராக இருந்து பிரபலமான கிஷான் தாஸ், முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இப்படம் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது.
இவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து இவர் தருணம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு திரைப்படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கிஷன் தாஸ் மற்றொரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘சிங்க்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகாஷ் ஆனந்த் ஸ்ரீதரன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் கிஷன் தாஸ் உடன் இணைந்து மோனிகா சின்ன கொட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ், நந்தினி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்திற்கு சிவராம் பிகே ஒளிப்பதிவு செய்ய அபிஜித் ராமசாமி இசை அமைத்துள்ளார்.

ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள சிங்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் இந்த படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ