அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதைத்தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த வகையில் ரசவாதி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்ததாக
அர்ஜுன் தாஸ் மலையாளத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து போர் என்ற படத்தில் நடித்துள்ளார். பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியானது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களை பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அர்ஜுன் தாஸ், கைதி 2 படம் குறித்து பேசி உள்ளார். அதாவது செய்தியாளர்கள் கைதி 2 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று அர்ஜுன் தாஸிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, “லோகேஷ் கனகராஜ் சார் தான் அதை சொல்ல வேண்டும். அப்படி அவர் அழைத்தால் அது நல்லது. நல்ல வேலையாக LCU வில் நான் இறக்கவில்லை. அதனால் கைதி 2 படத்தில் நான் இருப்பேன் என்று நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
- Advertisement -