spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆக்சன் கிங் உடன் சண்டை செய்யும் விஜய்... 'லியோ' லேட்டஸ்ட் அப்டேட்!

ஆக்சன் கிங் உடன் சண்டை செய்யும் விஜய்… ‘லியோ’ லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

லியோ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய், லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.

we-r-hiring

இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் சினிமாவின் மிகவும் வரவேற்பைப் பெற்ற இந்த ஜோடி பல ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் ப்ரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். மலையாள நடிகர்கள் சாந்தி மாயாதேவி, மேத்யூ தாமஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது லியோ படம் குறித்த சிறப்பு அப்டேட் கிடைத்துள்ளது. நாளை சென்னையில் நாடாகும் படப்பிடிப்பில் விஜய் உடன் நடிகர் அர்ஜுன் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையேயான சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். மேலும் அர்ஜுன் பிரஸ்தடிக் மேக்கப் உடன் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் மிரட்டல் வில்லன்கள் பலர் இருக்கின்றனர்.

ஒவ்வொரு சீனுக்கும் தியேட்டர்களில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கப் போவது உறுதி!

MUST READ