நடிகர் ஜாபர் சித்திக் லியோ படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாக்கி வருகிறது என்பது நாம் அறிந்ததே.

இந்தப் படம் LCU-வில் இருக்கா இல்லையா என்பது தான் தற்போதைய மிகப்பெரிய கேள்வி. இதற்கு பதில் கிடைக்காமல் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் அடியாளாக நடித்த நடிகர் ஜாபர் சாதிக், லியோ படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
இதனால் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டனர்.
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் லியோ. த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பை பார்த்துக் கொள்கின்றனர்.

இதற்கிடையில், ஜாஃபர் சாதிக் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெந்து தனிந்து காடு, மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கிய பாவக் கதைகள் படங்களில் நடித்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் ஜாபர் நடிக்கிறாராம்.


