- Advertisement -
மாறுபட்ட வேடத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான இயக்குநர்களுக்கு மத்தியில் முற்றிலும் மாறுபட்ட இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவரது கதை மட்டுமல்ல திரைக்கதை, இயக்கம் என அவரது ஒட்டுமொத்த திரைக்காட்சியும் வேறுபட்ட கோணத்தில் இருக்கும். பாலா இயக்கத்தில் நடித்த ஒவ்வொரு நடிகருக்கும் அது திருப்பு முனையாக அமைந்திருக்கும். பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் வணங்கான். இதில் முன்பு சூர்யா, ஒப்பந்தமாகி நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகி விட்டார். மேலும், கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகினார். இதையடுத்து, சூர்யாவுக்கு மாற்றாக அருண் விஜய்யும், க்ரித்தி ஷெட்டிக்கு மாற்றாக ரோஷினி பிரகாஷூம் நடித்துள்ளனர்.
