அசோக் செல்வன் நடிக்கும் எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
அசோக் செல்வன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. கிரைம் திரில்லர் கதைகளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சபாநாயகன், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார் அசோக் செல்வன். அதைத் தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன் ஒன்று கண்டேன் எனும் திரைப்படம் மார்ச் 24 இல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இதற்கிடையில் அசோக் செல்வன் எமக்குத் தொழில் ரொமான்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். இந்த படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனமும் பக்சால் வெண்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.