spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹீரோயினாக மாறிய பிக் பாஸ் மாயா.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஹீரோயினாக மாறிய பிக் பாஸ் மாயா…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

பிக் பாஸ் மாயா ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.ஹீரோயினாக மாறிய பிக் பாஸ் மாயா.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பலரின் ஃபேவரிட் நிகழ்ச்சியில் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கான அடையாளத்தை நிலைநாட்டி விடுகின்றனர். அதன்படி பலருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மாயா தற்போது ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம், விஜயின் லியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது ஃபைட்டர் ராஜா இன்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஹீரோயினாக மாறிய பிக் பாஸ் மாயா.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்த படத்தில் கதாநாயகனாக ராம்ஸ் நடிக்கிறார். இந்த படத்தை கிருஷ்ணா பிரசாத் என்பவர் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே சமயம் இந்த படம் தெலுங்கில் உருவாகி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ