spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அட்லீ - பிரியா

மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அட்லீ – பிரியா

-

- Advertisement -
அட்லீ மற்றும் பிரியா தம்பதி தங்கள் மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்து, பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லீ. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அட்லீ இரண்டாவது படத்திலேயே கோலிவுட்டின் டாப் ஸ்டாரான விஜய்யுடன் இணைந்தார். விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கிறார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே மெர்சல் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ.

we-r-hiring
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார்.

இதனிடையே, 2014-ம் ஆண்டு அட்லீ தனது நீண்ட நாள் காதலி மற்றும் நடிகையுமான பிரியாவை திருமணம் முடித்துக்கொண்டார். இருவருக்கும் இந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. மீர் என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், அட்லீ மற்றும் பிரியா தம்பதி, மகனின் பிறந்தநாளை டிஸ்னிலேண்டில் கொண்டாடி உள்ளார். லண்டனில் உள்ள டிஸ்னி பார்க்கின் வாசல் முன்பாக நின்று கொண்டு மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வௌியாகி வைரலாகி வருகிறது.

MUST READ