spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்புவின் 'பத்து தல' படத்தின் ஆடியோ வெளியீட்டு

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு

-

- Advertisement -

சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவின் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவன ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன்

we-r-hiring

இப்படத்தில் சிம்புவுடன் நடிகர் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பத்து தல படத்தின் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சிம்புவின் 'பத்து தல' படத்தின் ஆடியோ வெளியீட்டு

இந்த படத்தின் பாடல்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வரும் இந்நிலையில், பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் இசை வெளியீடு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்கள் இடையில் வைரலாக்கி வருகின்றனர்.

MUST READ