Homeசெய்திகள்சினிமாமாதவன் படத்தில் நடிக்க மறுத்த பூமிகா சாவ்லா.... என்ன படம் தெரியுமா?

மாதவன் படத்தில் நடிக்க மறுத்த பூமிகா சாவ்லா…. என்ன படம் தெரியுமா?

-

- Advertisement -

நடிகை பூமிகா சாவ்லா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர் தமிழில், பத்ரி, ரோஜாக்கூட்டம் , சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மாதவன் படத்தில் நடிக்க மறுத்த பூமிகா சாவ்லா.... என்ன படம் தெரியுமா?அடுத்தது இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமானது அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31 இல் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்காக இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பூமிகா சாவ்லா, தான் நடிக்க வேண்டிய சில படங்களில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.மாதவன் படத்தில் நடிக்க மறுத்த பூமிகா சாவ்லா.... என்ன படம் தெரியுமா?

அதன்படி தெலுங்கில் அஷ்ட சம்மா திரைப்படத்தை தவறவிட்டதாக கூறியுள்ளார். அதாவது திருமணம் போன்ற பல காரணங்களால் அஷ்ட சம்மா படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 2002-ஆம் ஆண்டு மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தையும் தவறவிட்டதாக கூறியுள்ளார். அந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை கேட்டதாகவும் அந்த காலகட்டத்தில் அம்மா கதாபாத்திரம் எனக்கு பொருந்தவில்லை என தான் எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார் பூமிகா சாவ்லா.

MUST READ