spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோவாவில் ரகுல் ப்ரீத் சிங்கின் கோலாகல திருமணம்... படையெடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்....

கோவாவில் ரகுல் ப்ரீத் சிங்கின் கோலாகல திருமணம்… படையெடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்….

-

- Advertisement -
கோவாவில் கோலாகலமாக நடைபெற உள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணத்தில் பங்கேற்க ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் படையெடுத்துச் செல்கிறது.

தென்னிந்திய சினிமாவைத் தாண்டி பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், அவரது முகம் பலருக்கு புலப்படவில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் என்னமோ ஏதோ படத்தில், நாயகியாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

மேலும் தீரன் படத்தின் வெற்றி ரகுலுக்கு தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை தேடித் தந்தது. என்ஜிகே படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். தேவ் படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். தெலுங்கில் ராம்சரண், ரவி தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இறுதியாக ரகுல் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியானது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
we-r-hiring

இவர் ஜாக்கி பாக்னானி என்ற நடிகரை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். இருவரின் திருமணமும் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒட்டுமொத்தபாலிவுட் நட்சத்திரங்களும் கோவாவுக்கு படையெடுத்துச் செல்கின்றனர். ஆதித்யா ராய் கபூர், சாரா அலிகான், அனன்யா பாண்டே, வருண் தவான் உள்பட பலரும் கோவாவுக்கு படையெடுக்கின்றனர்.

MUST READ