Homeசெய்திகள்சினிமாமுதன்முறையா உலகநாயகனுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்... டைரக்டர் யார் தெரியுமா!?

முதன்முறையா உலகநாயகனுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்… டைரக்டர் யார் தெரியுமா!?

-

நடிகை நயன்தாரா முதன்முறையாக கமல்ஹாசன் உடன் ஜோடி சேர இருப்பதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது.

‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைகின்றனர். முதலில் இந்தப் படத்தில் நடிகை திரிஷா தான் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது நயன்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக  இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி நடந்தால் இதுதான் நயன்தாரா கமலுக்கு ஜோடியாக நடிக்கும் முதல் படமாக இருக்கும். பல படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும் உலகநாயகனுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றும் பலரும் கூறி வந்தனர். இந்தப் படத்தின் மூலம் அந்த குறை நீங்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஷாருக்கான் உடன் நயன்தாரா ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களையும் அவர் கைவசம் வைத்துள்ளார்.

MUST READ