மாதவன், சித்தார்த், நயன்தாரா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா மூவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘டெஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப்படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த சசிகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகை ராஷி கண்ணாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.