Homeசெய்திகள்சினிமாலாரன்ஸ், கங்கனா கூட்டணியின் 'சந்திரமுகி 2'..... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

லாரன்ஸ், கங்கனா கூட்டணியின் ‘சந்திரமுகி 2’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

-

சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் இன்றைய வரையிலும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் பி வாசு இயக்கத்திலும் சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.எம் எம் கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சந்திரமுகி 2 என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமிமேனன், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் வேட்டை என் ராஜா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து இன்று காலையில் கங்கனா ரணாவத் நடித்துள்ள சந்திரமுகி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்வாகதாஞ்சலி எனும் முதல் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா நடனமாடும் ரா ரா எனும் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுபோல கங்கனா நடனமாடும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ