spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவேட்டையன் பராக்..... மாஸான லுக்கில் ராகவா லாரன்ஸ்....சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

வேட்டையன் பராக்….. மாஸான லுக்கில் ராகவா லாரன்ஸ்….சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இன்று வரையிலும் பலரின் ஃபேவரிட் படங்களின் ஒன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பி வாசு இயக்கி இருந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்கியுள்ளார். இதில் ராகவாலாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமிமேனன், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்க ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களுக்கு இசையமைத்த எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அதாவது சந்திரமுகி படத்தில் வேட்டையன் ராஜா பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.இதில் ராகவா லாரன்ஸ் மாஸான லுக்கில் காணப்படுகிறார். மேலும் இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ