spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சந்திரமுகி 2' புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா நிறுவனம்!

‘சந்திரமுகி 2’ புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா நிறுவனம்!

-

- Advertisement -

சந்திரமுகி 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பி வாசு 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் எம் எம் கீரவாணி இதற்கு இசையமைத்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து கங்கணா ரணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியானது.

we-r-hiring

இதற்கிடையில் இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்ப பணிகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ