spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சந்திரமுகி 2' படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

சந்திரமுகி 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எம் எம் கீரவாணி இதற்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதற்கிடையில் படத்தின் முதல் இரண்டு பாடல்களும், வேட்டையின் ராஜா மற்றும் சந்திரமுகியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

we-r-hiring

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ