spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசேரனின் 'தமிழ்க்குடிமகன்' ரிலீஸ் தேதி அப்டேட்!

சேரனின் ‘தமிழ்க்குடிமகன்’ ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

சேரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனரான சேரன் தமிழ்க்குடிமகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இதில் சேரனுடன் இணைந்து, ஸ்ரீ பிரியங்கா, லால், எஸ் ஏ சந்திரசேகர், தீப்ஷிகா வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சாம் சி எஸ் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு படத்திற்கு செய்துள்ளார்.

we-r-hiring

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

MUST READ