மிகவும் எதிர்பார்க்கப்படும் சதீஷின் கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் சதீஷ், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். சமீப காலமாக நடிகர் சதீஷ் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சதீஷ் நாய் சேகர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. அதைத்தொடர்ந்து வித்தை காரன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சதீஷ். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதேசமயம் சதீஷ் கான்ஜுரிங் கண்ணப்பன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சதீஷ் உடன் இணைந்து ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், நாசர், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காமெடி கலந்த ஹாரர் கதை களத்தில் உருவாகியிருந்த இப்படம் கடந்த டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் நாளை (ஜனவரி 5) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.