கூலி படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டது. அதே சமயம் இவரது நடிப்பில் கூலி எனும் திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ரஜினியின் 171 வது படமான இந்த படத்தில் நடிகர் ரஜினி தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார் என சமீபத்தில் படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட ஐதராபாத் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும் வருகின்ற மார்ச் 14 இல் இந்த டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல் கசிந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கூலி படத்தின் டீசர் 2025 ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அப்டேட் கிடைத்துள்ளது. அடுத்தது இந்த படமானது 2025 ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.