Homeசெய்திகள்சினிமாகிரிக்கெட் வீரர் கபில்தேவ் பிறந்தநாள்..... ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு!

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பிறந்தநாள்….. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘லால் சலாம்’ படக்குழு!

-

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பிறந்தநாள்..... ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு!ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. அதேசமயம் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.

மேலும் இப்படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருப்பதால் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இதில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் கபில்தேவ், கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்து முதன்முதலாக உலக கோப்பையை வென்றவர். தோற்கும் நிலையில் இருந்த இந்திய அணியை தனது அதிரடி ஆட்டத்தினால் வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தி கொண்டு சென்றார். மீதான பார்வையை மாற்றிய கபில்தேவ்- ஐ பின்பற்றி தான் இன்று பல கிரிக்கெட் வீரர்கள் சாதனை படைத்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பிறந்தநாள்..... ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு!இந்நிலையில் கபில்தேவ் – இன் 65 ஆவது பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் லால் சலாம் பட குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் கபில்தேவ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நடந்து வருவது போன்றும் அவர்களுக்கு பின்னால் பல கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் ஆனது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்த லால் சலாம் திரைப்படம் ஒரு சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ