இயக்குனர் தேசிங்கு பெரியசாமி STR 50 படம் குறித்து பேசியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. அதைத்தொடர்ந்து இவர், சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அந்த படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. எனவே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இந்நிலையில் தான் இந்த படம் கைவிடப்பட்டதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு STR 50 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிரடியாக வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வகையில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க இருக்கிறார். STR 49 படத்திற்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் தேசங்கு பெரியசாமி பேசியுள்ளார்.
#DesinghPeriyasamy Recent
– If the #STR50 movie is happening, the only reason for it is U1 Sir.
– When I told this story to U1 Sir, he said, “This film is made by us, without expecting anything.”
– This movie needs to be DROP at some point.#STR49
pic.twitter.com/0RiQz79xrY— Movie Tamil (@MovieTamil4) February 28, 2025

அதன்படி அவர் பேசியதாவது, ” STR 50 ப்ராஜெக்ட் நடப்பதற்கு யுவன் சங்கர் ராஜா தான் முக்கிய காரணம். அவரிடம் கதை சொன்னேன். அதன் பிறகு அவர் எதைப் பற்றியும் பேசவில்லை. எப்போது ஆரம்பிக்கலாம் என்று கேட்டார். அதன் பிறகு சிம்பு சாருக்கு கால் பண்ணி பேசி அவர் கொடுத்த ஊக்கம்தான் இப்போது இந்த ப்ராஜெக்ட் நடக்கிறது. கிட்டத்தட்ட இந்த படம் கைவிடப்பட்டது. இதன் பிறகு யுவனை சந்தித்த பிறகு தான் இந்த படம் மீண்டும் தொடங்கியது” என்று தெரிவித்துள்ளார்.