Homeசெய்திகள்சினிமா'தேவரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

‘தேவரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -
kadalkanni

தேவரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'தேவரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான படம் தான் தேவரா பாகம் 1. இந்த படத்தினை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். இதனை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவாகும் தேவரா படத்தின் முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து ஜான்வி கபூர், சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 'தேவரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு!இருப்பினும் கிட்டத்தட்ட 400 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ