குபேரா படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டியும் சாதனை படைத்து வருகிறார். மேலும் இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் 2025 ஜூன் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகிய ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றுடன் (மே 10) நடிகர் தனுஷ், திரைத்துறையில் 23 வருடங்களை நிறைவு செய்துள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.