Homeசெய்திகள்சினிமாரொமான்டிக் ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

ரொமான்டிக் ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

-

பிரபல நடிகை நித்யா மேனன் ரொமான்டிக் ஃபேண்டஸி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ரொமான்டிக் ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பல்வேறு ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் நித்யா மேனன், விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதன்படி ஏற்கனவே தமிழில் வெளியான மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைந்து காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நித்யாமேனன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் ரொமான்டிக் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கதையின் நாயகர்களாக நவ்தீப் மற்றும் வினய் ராய் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரொமான்டிக் ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!பாஸ்க் டைம் தியேட்டர், பாப்டர் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை விஷ்ணுவர்தனின் உதவி இயக்குனர் காமினி இயக்குகிறார். தலைப்பு வைக்கப்படாத இந்த படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தற்போது இது சம்பந்தமான அறிவிப்பை பரப்பினர் வெளியீட்டுள்ள நிலையில் மேலும் படம் தொடர்பான தற்போது இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் மேலும் படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ